ஸ்ரீவைகுண்டம் செப் 8 நவதிருப்பதி கோவில்களில் ஒன்பதாம்திருப்பதி யான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஆண்டுதோறும் பௌத்ரோத்ஸவம் நடைபெறுவது உண்டு.
கோவில்களில் தினசரி நடைபெறும் பூஜை புனஸ்கார முறைகளில் ஏதாவது விடுதல்கள் இருப்பின் அதற்கு பரிகாரங்களாக பௌத்ரோத்ஸவம் நடத்துவது வழக்கம். கடந்த செப்டம்பர் 4 ந்தேதி தொடங்கி எட்டு நாள் நடைபெறுகின்ற உத்ஸவத்தில் 5 ம் நாளான
இன்று காலை 6.15 மணிக்கு விஸ்வரூபம். 7.45 மணிக்கு திருமஞ்சனம். 9.30 மணிக்கு சிறப்பு ஹோமம். 11.30 மணிக்கு பூர்ணாகுதி. நாலாயிர திவ்யப்பிரபந்த சேவைகள் நடந்தது.
12.30 மணிக்கு சாத்துமுறை. தீர்த்தம். சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை. 5.30மணிக்கு ஹோமம். 6.30 மணிக்கு வாகன குறட்டற்கு மணிக்கு சுவாமிகள் பொலிந்து நின்றபிரான் மற்றும் நம்மாழ்வார் எழுந்தருளினாரகள்.
7.30 மணிக்கு பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் ஹம்ஸ வாகனத்திலும் காட்சி தந்தார். பின்னர் மாட வீதி புறப்பாடு நடந்தது.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் கண்ணன்.. விவேக்ரங்கராஜன். எம்பெருமானார் ஜீயர். நிர்வாக அதிகாரி சதீஷ் அறங்காவலர் குழுத் தலைவர் ராமானுஜம் என்ற கணேசன். உறுப்பினர்கள் கிரிதரன். ராமலட்சுமி. செந்தில் குமார். காளிமுத்து. கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். செப்டம்பர் 11 ந்தேதி தீர்த்த வாரி நடைபெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக