ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு கட்டாயம் - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
வேலூர் , செப் 01 -
வேலூர் மாவட்டம் ஆசிரியர் பணியில் சேரவும், தொடரவும் மற்றும் பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது 2009-ஆம் ஆண்டு குழந்தைகளுக் கான இலவச மற்றும் கட் டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்(RTE Act) அடிப்படையில் உறுதிப்படுத்தப் பட்டு
ள்ளது.இந்தத் தீர்ப்பின்படி, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் TET-ஐ எழுதி தேர்ச்சி பெற வேண்டும் மே லும், ஓய்வு பெறுவதற்கு ஐந்து ஆண்டு களுக்குள் உள்ள ஆசிரியர்கள் இந்தத் தேர்வு எழுதாமல் பணியைத் தொடரலாம், ஆனால் அதற்கு மேல் பணியாற்ற வாய்ப் புள்ள ஆசிரியர்கள் கட்டாயம் TET-ஐ தேர் ச்சி பெற வேண்டும். இல்லை யெனில், அவர்கள் பணியிலிருந்து வெளியேற்ற
ப்படலாம் அல்லது கட்டாய ஓய்வு அளிக்க ப்படலாம் என்று நீதிபதி திபான்கர் தத்தா தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள் ளது. மேலும், சிறுபான்மை நிறுவனங் களில் தேர்வை கட்டாயப்படுத்த முடியுமா? என விசாரிக்க உயர் அமர்வுக்கு வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, 2011-க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் TET தேர்ச்சி பெற வேண் டும் என்று கூறுகிறது, ஆனால் சில மாநி லங்களில் விலக்குகள் வழங்கப்பட்டுள் ளன. தமிழ்நாட்டில், சென்னை உயர்நீதி மன்றம் 27.09.2011-க்கு முன் நியமிக்கப் பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்ச்சிதேவை யில்லை என தீர்ப்பளித்திருந்தாலும் பத வி உயர்வுக்கு (எ.கா., தலைமை ஆசிரி யர்) TET தேர்ச்சி கட்டாயம் என உறுதிப் படுத்தியுள்ளது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக