இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ஆய்வு!
ராணிப்பேட்டை , செப் 23 -
ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், இ.கா.ப.அவர்கள் நெமிலி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பனப்பாக்கம் வாரச் சந்தை நடைபெறும் இடங்களையும், அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரயில்வே நிலையம் மற்றும் சுவால்பேட்டை சீனிவாசன் தெரு ஆகியவற்றை ஆய்வு செய்து பொது மக்களை பாதுகாக்கவும், குற்றங்கள் நிகழா வண்ணம் ரோந்து பணிகளை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார்.
உடன் அரக்கோணம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் . ஜாபர் சித்திக், பாணாவரம் வட்ட காவல் ஆய் வாளர் நாகேந்திரன் உடன் இருந்தனர்.
தமிழக குரல் சிறப்பு செய்தியாளர் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக