மாற்றுத் திறனாளி தாக்கப் பட்டதை கண்டித்து மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!
ராணிப்பேட்டை, செப் 3 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே மாற்றுத் திற னாளி தாக்கப் பட்டதை கண்டித்து மாற் றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடை பெற்றது
நாகப்பட்டினம்மாவட்டத்தைச் சார்ந்த மாற் றுத்திறனாளி கந்தசாமி தாக்கப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசு காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்தி றனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் சார்பில் புதனன்று (செப் 3) மாவட்டத் துணை அமைப்பாளர் கே. பிச்சாண்டி தலைமையில் ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். மணிகண்டன், தாலுகா செயலாளர் ஜி. மதியழகன், விதொச மாவட்ட தலைவர் டி. சந்திரன். சிபிஎம் ஆற்காடு தாலுகா குழு உறுப்பினர்கள் விஜயன், கன்னியப்பன், சங்கத்தின் மாவ ட்டத் துணை அமைப்பாளர்கள் கே. ஜான கிராமன், கே. கிருஷ்ணமூர்த்தி, காவனூர் துணைத் தலைவர் ஜி. சிங்காரவேலு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொ ண்டு கண்டன உரையாற்றி முழக்கங் களை எழுப்பினர் .
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக