தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பறித்து வைத்திருந்த மொபைல் மீட்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 30 செப்டம்பர், 2025

தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பறித்து வைத்திருந்த மொபைல் மீட்பு


பழங்குடியினர் பிரச்சனையைத் தீர்த்து வைத்த பத்திரிகையாளர் சங்க தலைவர் கருணாநிதி – மக்களிடமிருந்து பாராட்டு


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சி.அம்மாபட்டி அம்பேத்கர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனனின் மனைவி பானுமதி, பஜாஜ் நிதி நிறுவனத்தில் தவணை முறையில் வாங்கிய மொபைல் ஃபோனை நிறுவன ஊழியர்கள் பறித்து வைத்து ஏமாற்றி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


இதைத் தொடர்ந்து, பானுமதி உட்பட பழங்குடியினர் தாராபுரம் பத்திரிகையாளர் சங்க தலைவர் திரு. கருணாநிதி அவர்களை அணுகி புகார் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்திய கருணாநிதி, காவல்துறையினருக்கும் தகவல் வழங்கினார். பின்னர் பஜாஜ் நிதி நிறுவன ஊழியர்களும் பானுமதியும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, பானுமதியின் குற்றச்சாட்டு நியாயமானது என்பதை உறுதிப்படுத்தினர்.


இதன் அடிப்படையில், கடந்த 29-9-2025, திங்கட்கிழமைக்குள் மொபைல் திருப்பித் தருவதாக ஊழியர்கள் உறுதியளித்தனர். அதன்படி, இன்று பானுமதியின் மொபைலை நிதி நிறுவன ஊழியர்கள் திருப்பி வழங்கினர்.


இந்நிகழ்ச்சியால் மகிழ்ச்சியடைந்த பழங்குடியினர், தாராபுரம் பத்திரிகையாளர் சங்க தலைவர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்ததுடன், தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.


பத்திரிகையாளர் சங்க செயலாளர் காஜா மைதீன், பொருளாளர் கண்ணன், கௌரவத் தலைவர் மன்சூர், துணைத் தலைவர் தங்கவேல், செய்தி தொடர்பாளர் கிருபாகரன், செயற்குழு உறுப்பினர் பிரதீப், உதவி செய்தி தொடர்பாளர் கவியரசன், செயற்குழு உறுப்பினர் தாஜ் ஜாபர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், பொதுமக்களின் பிரச்சனைகளை தொடர்ந்து அதிகாரிகள் முன் எடுத்துச் சென்று தீர்வு காண்பதில் சங்கம் எப்போதும் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.


இந்த சமூக நலப் பணிக்காக பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad