மாணவர்கள் கையில் “பாலம் வேண்டும் பதாகைகள் உடன் கலெக்டரை சந்தித்த மாணவர்கள் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 30 செப்டம்பர், 2025

மாணவர்கள் கையில் “பாலம் வேண்டும் பதாகைகள் உடன் கலெக்டரை சந்தித்த மாணவர்கள் !

மாணவர்கள் கையில் “பாலம் வேண்டும் பதாகைகள் உடன் கலெக்டரை சந்தித்த மாணவர்கள் !

காவேரிப்பாக்கம், செப் 30 -

காவேரிப்பாக்கம் பாசன கால்வாயை கடக்க பாலம் அமைத்து தர வேண்டி மாணவர்கள் கையில் பாலம் வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகை களை ஏந்தியவாறு வந்து மனு அளித் தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப் பாக்கம் அடுத்த சித்தஞ்சி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் பாசன கால்வாய் கடந்து செல்ல பாலம் அமைத்து தர வேண்டும் என கூறி,  பதாகைகளை ஏந்தி எவ்வாறு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
காவேரிப்பாக்கம் அடுத்த சித்தஞ்சி கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் தங்களு டைய அத்தியாவசிய மற்றும் மருத்துவ தேவைகளுக்காக காவேரிப்பாக்கம் செல்வதற்கு, காவேரிப்பாக்கம் பெரிய ஏரியிலிருந்து தாமல் ஏரிக்கு செல்லும் பாசன கால்வாயை கடக்க வேண்டியுள் ளது. குறிப்பாக மழைக்காலங்களில் பாசன கால்வாயில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் வேறு வழியின்றி 5 கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது இதனால் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளும், மருத் துவ தேவைகளுக்காக செல்லும் நோயாளிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பாசன கால்வாயை கடந்து செல்ல பாலம் அமைத்து தரவேண்டும் எனக்கு ஒரு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பயிலும் மாணவர்கள் எங்களுக்கு பாலம் வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதவிகளை ஏந்தியவாறு வந்து ராணிப் பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தனர்.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad