கந்தலி ஒன்றியத்துக்கு உடபட்ட நத்தம் பகுதியில் புதிய தரைப்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டிய எம் எல் ஏ ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 29 செப்டம்பர், 2025

கந்தலி ஒன்றியத்துக்கு உடபட்ட நத்தம் பகுதியில் புதிய தரைப்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டிய எம் எல் ஏ !

கந்தலி ஒன்றியத்துக்கு உடபட்ட நத்தம் பகுதியில் புதிய தரைப்பாலம்  அமைக்க அடிக்கல் நாட்டிய எம் எல் ஏ !
திருப்பத்தூர் , செப் 29 -

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்ட மன்றத் தொகுதி கந்திலி ஒன்றியத்து க்குட்பட்ட நத்தம் ஊராட்சி பாம்பாற்றின்  குறிக்கே  நபார்டு திட்டத்தின் மூலம் ரூ 2.70 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தரை பாலம் அமைக்கும் பணிக்கு திருப்பத்தூர் ஒன்றிய கழக செயலாளரும், திருப்பத் தூர் சட்டமன்ற உறுப்பினருமான  A_நல்லதம்பி ,MLA அவர்கள் பூமி பூஜை செய்த பணியினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமுருகன் அவர்கள் தலைமையில் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் குமார் ரங்கசாமி.கந்திலி ஒன்றிய கழக செயலாளர்கள்  K.முருகே சன், K.A.குணசேகரன், K.S.A.மோகன்ராஜ், ஆகியோரின் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் குமார், அவர்கள் வர வேற்பு வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணி, அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர் கள் மற்றும் BLA2, BDA , BLC, கழக உடன் பிறப்புகள், பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.இப்பகுதி பொது மக்கள் கோரிக்கையான தரை பாலம் அமைக்க பெற்று தந்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்   A.நல்லதம்பி.MLA, அவர்களுக்கு பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், மற்றும் பொது மக்கள் பெண்கள் என பலரும் மனமார்ந்த நன்றி தெரிவித்து கொண்டனர்.

 செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad