பாலம் அமைத்து தர வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் விடுதலை சிறுத் தை கட்சியின் சார்பில் மனு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 29 செப்டம்பர், 2025

பாலம் அமைத்து தர வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் விடுதலை சிறுத் தை கட்சியின் சார்பில் மனு!

பாலம் அமைத்து தர வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம்  விடுதலை சிறுத் தை கட்சியின் சார்பில் மனு!
திருப்பத்தூர் , செப் 29 -

திருப்பத்தூர் அருகே பல ஆண்டுகளாக சடலத்தை தண்ணீரில் சுமந்து செல்லும் அவலம், பாலம் அமைத்து தர விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காக்கணாம்பாளையம்கூடப்பட்டு  வள்ளூவர் காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 3000க்கும் மேற்பட்ட  குடுபத்தினர் வசித்து வருகின்றனர்.இதனையெடுத்து பாம்பாற்றை கடந்து தண்ணீரில் சடலத் தை சுமந்து அடக்கம் செய்து வந்த நிலை யில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் தரைப்பாலம் அமைத்து தரப்பட்டு உள்ளது.அந்த பாலம்  ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பாலம் அடித்து சென்றதால் மீண்டும் அப்பகுதி பொதுமக்கள் ஆற்றை கடந்து தண்ணீரில் சடலத்தை சுமந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது.இதனால் மாவட்ட நிர்வாகமும் பாலம் அமைத்து தரக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேலூர் திருப்பத்தூர் மண்டல செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் திருப் பத்தூர் தெற்கு மாவட்ட செயலாளர் வெற்றிக்கொண்டான் ஆகியோர் தலை மையில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவசெளந்தரவல்லியிடம் மனு அளித்தனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad