மல்லகுண்டா ஊராட்சியில் தொழிற் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 29 செப்டம்பர், 2025

மல்லகுண்டா ஊராட்சியில் தொழிற் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு!

மல்லகுண்டா ஊராட்சியில் தொழிற் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு!
நாட்றம்பள்ளி, செப் 29 -

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம் பள்ளி அடுத்த மல்லகுண்டா ஊராட்சியில் கோயான்கொல்லை,புள்ளனேரி,சுண்ணாம்புக்கார கொல்லை, வேலமரத்து வட்டம், வெப்பாலமரத்து வட்டம், கேத்தா ண்டபட்டி ஊராட்சி என பத்துக்கும் மேற் பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த நிலை யில் கோயான்கொல்லை பகுதியில் அரசுக்கு சொந்தமான மேஷல் தரை புறம்போக்கு நிலங்கள் உள்ளன இந்த நிலத்தில் காலங்காலமாக அப்பகுதி மக்கள் ஆடு மாடுகளை மேய்த்தும்,  உழவு செய்து பயிர் சாகுபடி செய்து வாழ்வா தாரம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் அந்தப் பகுதியில் தொழிற் பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த தொழிற் பூங்கா அமைத்தால் நீர் வளம் மற்றும் காற்று மாசுபடும் மேலும்  எனவே பகுதியில் வாழ்ந்து வரும் மக்களின் சுகாதார பாதிப்படையும் மேலும் காலங்காலமாக வாழ்ந்து வரும் எங்களை அங்கிருந்து அப்புறப்படுத்த அரசு வழி வகை செய்யும் எனவே இந்த தொழிற் பூங்கா இங்கு அமைக்க கூடாது என கூறி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட் டோர் மனு அளித்தனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad