திருப்பத்தூர் மாவட்டத்தில் சந்திரமுகி நவராத்திரி ரீ மேக்!. திரை பிரபலங்கள் பங்கேற்பு!.
திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை, பள்ளக்கனியூர் பகுதியில் உள்ள தங்க கோட்டை நட்சத்திர ஓட்டலில் நவராத்திரி யை முன்னிட்டு சந்திரமுகி ரீ கிரியேஷன் கண்டஸ்ட் நடைபெற்றது. இதில் சிறுவர் கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி ஏராளமானோர் கலந்து கொண்டு கடந்த 2005 ம் ஆண்டு வெளி யான சந்திரமுகி திரைப்படத்தில் வரும் சந்திரமுகி கதாபாத்திரத்தில் சிறந்து நடிக்ககூடிய நபர்களுக்கு முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், 2ம் பரிசு 15 ஆயிரம் ரூபாய் உட்பட 3 பரிசு கள் வழங்கப்பட்டன. அதில் சென்னை, பெங்களூரு, வேலூர், வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது நடிப்பு திறமையை வெளிப்படு த்தினா். அதில் சிறப்பு அழைப்பாளர் களாக செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நாஞ்சில் விஜயன், சின்னதுரை நடிகர் சாய் சக்தி உட்பட பலர் கலந்து கொண்டு நடனமாடினர். முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு தொகை வழங் கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக் கும் கேடயம் மற்றும் சான்றிதழ்களை ஓட்டல் உரிமையாளர் தேன்மொழி வழங்கினார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக