அத்திஇயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரி சார்பாக மாணவர்களுக்கான காவல் செயலி அறிமுக விழிப்புணர்வு நிகழ்ச்சி!
குடியாத்தம் , செப் 29 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம், காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரிமற்றும் அத்தி செவிலியர் கல்லூரி சார்பாக மாணவர்களுக்கான காவல் செயலி அறிமுக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் அத்தி மருத்துவமனை யின் தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பெ. சௌந்தரராஜன் அவர்கள் அறிவுறுத்த லின் படி விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டது . இதில் அத்தி செவிலியர் கல்லூரி முதல் வர் டாக்டர் பால்ராஜ் சீனித்துரை அனை வரையும் வரவேற்றார் . அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஷ் ராஜாமணி விழாவை துவங்கி வைத்தார். இதில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் ஏ மயில் வாகனன் இ கா பா அவர் களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணா துரை ccw அவர்களின் ஆலோசனை படியும் சி ஐ யு சி ஏ டபுள்யூ எஸ் ஜே எஸ் ஆர் மற்றும் ஏ சி டி சி போலீசார் இணை ந்து மாணவ மாணவிகளுக்கு சாதி ,மத இன வேறுபாடு இன்றி இச்சமுதாயத்தில் அனைவரும் சமம் என்றும் வன்கொடுமை கள் பற்றியும் அதனால் ஏற்படும் பாதிப்பு கள் குறித்தும் பெண்கள் தொடர்பான உதவி எண் 1 8 1, குழந்தைகள் தொடர் பான உதவி எண் 1098, குழந்தை திரு மணம் காவல் உதவி செயலி மற்றும் போக்சோ தொடர்பாக விளக்கி விழிப்பு ணர் ஏற்படுத்தினர். புள்ளியல் ஆய்வா ளர் முத்துக்குமார் கவிதா சுஜிமா அனை வரும் சமூக நீதி மற்றும் மனித உரிமை கள் பிரிவு மற்றும் கலைச்செல்வி பெண் கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு நடத்தப்பட்டது இதில் சுமார் 242 மாணவ மாணவியர்கள் கலந்துக் கொண்டு குழந் தை திருமணம் காவல் உதவி செயலி அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன் பெற்றனர்மேலும் பேராசிரியர்கள்மருத்து வர்கள் மற்றும் துறை தலைவர்கள் கலந்துகொண்டனர் .இறுதியாக குடியாத் தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கா. குமரவேல் நன்றி கூறினார் . அத்தி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சௌ சுகநாதன் அவர்கள் நிகழ்ச் சியை ஒருங்கிணைத்தார்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக