கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையும், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையும் இணைந்து நாகர்கோவில் ஆயுதப்படை முகாமில் “உலக முதலுதவி தினம்” செப்டம்பர் 13- ம் தேதி கொண்டாடப்பட்டது.
நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் பிரேதீஷ் ராஜ் , டாக்டர் ஆம்லின், டாக்டர் அபினிஷா, டாக்டர் மெடிலின், டாக்டர் ராகவி மற்றும் டாக்டர் வில்லியம் ஸ்டீபன் ஆகியோர் காவல் துறையினருக்கு கார்டியோ பல்மொனரி (மறுஉயிர்ப்பித்தல்) மற்றும் முதலுதவி குறித்த நடைமுறை பயிற்சி வழங்கினர்.
150-க்கும் மேற்பட்ட ஆண் , பெண் காவல்துறை பணியாளர்கள் இதில் பங்கேற்று நேரடி பயிற்சியை பெற்றனர்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் IPS அவர்கள் முக்கிய உரையாற்றினார். தொடர்ந்து நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவ குழுவை ஆயுதப்படை முகாம் இன்ஸ்பெக்டர் திரு அருண் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக