குடியாத்தம், ராபின்சன் பூங்கா அருகில் அத்தி மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ முகாம் !
குடியாத்தம் செப் 12 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்து வர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பெ . சௌந்தரராஜன் அவர்கள் அறிவுறுத்தலின்படி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது . அத்தி மருத்துவமனை யின் கிளை தலைமை மருத்துவர் டாக்டர் ஆ கென்னடி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட குடியாத்தம் நகரமன்ற தலைவர் சௌந்தர்ராஜன் அவர்கள் முகாமை துவ க்கி வைத்து நோயாளிகள் பயனடையு மாறு கேட்டுக் கொண்டார் குடியாத்தம் முன்னாள் நகரமன்ற தலைவர் அமுதா சிவபிரகாசம் , கவுன்சிலர் ஆர் கே அன்பு, அரிசி மண்டி ராஜேந்திரன், திருநாவுக்க ரசு, போக்குவரத்து ஆய்வாளர் முகேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மருத்துவர் ஆ கென்னடி தலைமையில் மருத்துவக் குழு மூலம் சர்க்கரை, மூட்டு வலி, இரத்த அழுத்தம் போன்ற 200 க்கு மேற்ப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியின் முதல்வர் மகேஷ் ராஜாமணி , அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனித் துரை மற்றும் குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கா குமரவேல் ஆகி யோர் கலந்துக் கொண்டனர் .அத்தி மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி சரவணன் நன்றி கூறினார் .அத்தி கல்விக் குழுமத்தின் அறங்காவலர் டாக்டர் S . சுகநாதன் அவர்கள் மருத்துவ முகாமை ஒருங்கிணைத்தார் .
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக