தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறிவியல் கணித வினாடிவினா போட்டி
சான்றிதழ், கேடையம் வழங்கி பாராட்டு!
வேலூர் , செப் 12 -
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவ - மாண விகளுக்கு அறிவியல் கணித வினாடி வினா போட்டி சான்றிதழ், கேடையம் வழ ங்கி பாராட்டு! துளிர், ஜந்தர் மந்தர் அறி வியல் இதழ்கள், இயல் அறிவியல் (இயற்பியல், வேதியியல்), உயிர் அறிவி யல் (உயிரியல், தாவரவியல்) கணிதம் வானவியல், தமிழ் மற்றும் பொது அறிவு உள்ளிட்ட பாடதிட்ட தலைப்புகளிருந்து வினாக்கள் தொகுக்கப்பட்டு, 6 சுற்றுகள் வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது.
வேலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேலூர் மாநாகரம் மற்றும் ஊரகப்பகுதிகளில் இயங்கிவரும், அரசு மற்றும் அரசு நிதி உதவி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற, வேலூர் ஒன்றிய அளவிலான போட்டிகள் இன்று12.09.2025 காலை 9.30 மணிமுதல் மாலை 5 மணி வரை வேலூர் அரசு முஸ்லீம் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. துளிர் வினாடி வினா போட்டிகள் தமிழ் வழியிலும், ஜந் தர் மந்தர் வினாடி வினா போட்டிகள் ஆங் கில வழியிலும் நடத்தப்பட்டன.இந்த நிகழ்விற்கு வேலூர் கிளை செயலாளர் முத்து.சிலுப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்ட கருத் தாளர் பா.ராஜேந்திரன் வரவேற்று, முதல் 6,7,8 இளநிலை பிரிவு மாணவர்களுக் கான வினாடி வினா போட்டியினை நட த்தி துவக்கி வைத்தார். மாவட்ட செயலா ளர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டி களில் பங்கேற்ற, வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ், புத்தக பரிசு மற்றும் கேடையம் வழங்கி பாராட்டி பேசினார்.துளிர் வினாடி வினா போட்டி யின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பா ளர் பி.சுகுமார், குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோ.சீனிவாசன், மாவட்ட இணை செய லாளர் அ.பாஸ்கர், வேலூர் கிளை நிர்வா கிகள் கி.மூர்த்தி, ச.இளவழகன், மூ.அபிந யா, மூ.அருண்குமார், துரைசாமி, அம்பா னி உள்ளிட்டோர் போட்டிகளை ஒருங்கி ணைத்தனர் அறிவியல் கணிதம் உள்ளி ட்ட 6 வகையான பாட தலைப்புகளில் வினாடி வினா போட்டிகள் இடைநிலை தொகுப்பில் 6,7 மற்றும் 8ஆம் வகுப்பு, உயர்நிலை தொகுப்பில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு, மேல்நிலை தொகுப்பில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவி கள் என மூன்று குழுக்களாக பிரிக்கப் பட்டு பங்கேற்றனர். இந்த போட்டிகள் 6 சுற்றுகள் நடைபெற்றது.
இந்த போட்டி களில் வேலூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகள் பாகாயம், எட்டியம் மன் கோ வில் தோட்டப்பாளையம், ஊரா ட்சி ஒன் றிய நடுநிலைப்பள்ளி சத்துவாச் சாரி, அரசு உயர்நிலைப்பள்ளி, கொசப் பேட்டை, அரசு முஸ்லீம் ஆர்.என்.பாளை யம், விவிஎன்கேஎம் அரசு உதவிபெறும் மேல் நிலைப்பள்ளி, ஈவேராநா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வேலப்பாடி விகே விமு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற னர். ஆசிரியர்கள் ந.கலைச்செல்வன், சி.சித் ரா, ர.ரம்யா, செல்வகணேஷ், அம்பிகா, டி.சாந்தகௌரி, லோகநாயகி, டி.சித்ரா, ஷகனாஷ்பாதிமா, அஞ்சலா வசந்தகு மாரி உள்ளிட்டோர் பங்கேற்ற னர். தமிழ் வழி துளிர் வினாடி வினா போட்டிகளில் 9 குழுவினரும், ஆங்கில வழி ஜந்தர் மந்தர் வினாடி வினா போட் டிகளில் 12 குழுவினரும் ஆக மொத்தம் 21 குழுக்கள் பங்கேற்றனர். இவர்களில் மூன்று குழுக்கள் தேர்வு செய்து மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க செல்வர். மாவட்ட அளவில் தேர்வு செய் யப்படும் மாணவர்களில் மண்டல அளவிலும், பின்னர் மாநில அளவிலும் பங்கேற்பர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக