தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஆம்பூர் புத்தக திருவிழாவில் ஆசிரியர் , மாணவர்களுக்கு பாராட்டு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 12 செப்டம்பர், 2025

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஆம்பூர் புத்தக திருவிழாவில் ஆசிரியர் , மாணவர்களுக்கு பாராட்டு!

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஆம்பூர் புத்தக திருவிழாவில் ஆசிரியர் , மாணவர்களுக்கு பாராட்டு!
ஆம்பூர் , செப் 12 -

திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவி யல் இயக்கத்தின் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் ஆம்பூர் தேவலாபுரம் கோவில் மண்டபத்தில் 3வது ஆண்டாக நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் 7வது நாள் விழாவில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாராட்டு.இந்த விழா விற்கு மாவட்ட தலைவர் சி.குணசேகரன் தலைமை தாங்கினார்.  முன்னதாக ஒன் றிய தலைவர் ஜே.ரமேஷ் வரவேற்று பேசினார்.  அறிவியல் வெளியீட்டுக் குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுப்பிரமணி, வேலூர் மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த் தனன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.  எழுத்தும் சுதந்திரம் சிறப்புரைபாராளுமன்றத்தின் ராஜ்யசபா உறுப்பினரும், தமிழ் கவிதை மற்றும் புனைகதை எழுத்தாளரும், முன்னாள் தமிழ்நாடு சமூக நலத்துறையின் முன் னாள் தலைவருமான எழுத்தளார்.சல்மா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கே ற்று பள்ளி நூலகங்களுக்கு நூல்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன மாவட்ட பொருளாளர் பெ.ஜெயசுதா, துணைச் செயலாளர்கள் ஜெ.உதயகுமார்,  என். சபாரத்தினம், நிர்வாகிகள் எம்.எழிலரசன் ஆர்.கல்பனா, ஓய்வுபெற்ற தலைமையா சிரியர் க.கருணாகரப்பிள்ளை வரவேற் புக்குழு உறுப்பினர்கள் பிரியதர்ஷிணி, எஸ்.சுபஶ்ரீ, என்.சர்மிளா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விழாவில் கலைநிகழ்வுக ளில் பங்கேற்ற மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சல்மா அவர் கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.  வேலூர் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனா ர்த்தனனுக்கு நினைவு பரிசுகளை மாவ ட்ட நிர்வாகிகள் வழங்கி கெளரவித்தனர்.
முடிவில் கிளை செயலாளர் கே.இசை தமிழ் நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad