தாராபுரத்தில் புத்தகத் திருவிழா தொடக்கம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 20 செப்டம்பர், 2025

தாராபுரத்தில் புத்தகத் திருவிழா தொடக்கம்



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் அரிமா அரங்கில் புத்தகத் திருவிழா இன்று (19ம் தேதி) மாலை துவங்கியது. இந்த திருவிழா வரும் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.


மொத்தம் 23 அரங்குகளில் ஆயிரக்கணக்கான பல்துறை நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து நூல்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. கல்வி நிறுவனங்கள், நூலகங்களுக்கு கூடுதல் விலைச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும். மாலை 6 மணிக்கு சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் போன்றவை நடைபெற உள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


புத்தகத் திருவிழாவைத் திறந்து வைத்து விழா உரையாற்றியவர், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன். முதல் விற்பனையைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றியவர், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ்.


முதல் விற்பனையைப் பெற்று வாழ்த்துரை வழங்கினர், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவர் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்நாபன் தலைமை தாங்கினார் மேலும் தாராபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் ஆ. ஃபெலிக்ஸ் ராஜா, காவல் துணைக்கண்காணிப்பாளர் S.சுரேஷ்குமார், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.வி.செந்தில்குமார், கொளத்துப்பாளையம் பேருராட்சி துணைத்தலைவர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜீவா கே.கே. துரைசாமி, தாராபுரம் நகர்மன்றத் தலைவர் பொறியாளர் கு. பாப்புக்கண்ணன், முன்னாள் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் தலைவர் சு. தனசேகரன், நகர்மன்ற உறுப்பினர், நகர செயலாளர் பொறியாளர் சு. முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.


இந்தக் கண்காட்சியில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி, பெரியார், அம்பேத்கர், காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, காமராஜர், இந்திரா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு நூல்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் அறிவியல், கல்வி, தொழில்நுட்பம், வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, கணக்கியல் போன்ற பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


மூலனூர், குண்டடம், கோவிந்தாபுரம், அலங்கியம், தளவாய், பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் திரளாக வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.


புத்தகங்கள் வாசிப்பது அறிவை வளர்க்கும், வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வழிவகுக்கும், நல்ல சிந்தனை மற்றும் சமூக மாற்றத்துக்கான அடித்தளமாக அமையும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். புத்தகக் கண்காட்சி மூலமாக மாணவர்கள் புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள் எனவும், இளைஞர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்துவதற்கு இத்தகைய திருவிழாக்கள் பெரிதும் உதவுகின்றன எனவும் வலியுறுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad