தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரிபகுதியை சார்ந்த சரவணன் என்பவரின் மகன் ஆறுமுகவேல் என்பவர். இச்சிறுவன் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாவது வகுப்பு படித்து வருகிறான்
இவர் 12 வயது நிரம்பியவர். நேற்று மாலை ஆறுமுகநேரி திருச்செந்தூர் சாலையில் அரசு மகளிர்மேல்நிலைப் பள்ளி அருகில் சாலையை கடக்க முயன்ற பொழுது பள்ளியின் அருகே உள்ள வேகத்தடையில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில், அரசு பேருந்து ஓட்டுனரின் கவன குறைவினால் பேருந்து சிறுவனின் தலையில் ஏறி நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தான்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அந்தப் பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு திருச்செந்தூர் ஆறுமுகநேரி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பகுதியில் இது போல் சம்பவம் அடிக்கடி நடந்து கொண்டிருப்பதினால், மேலும் இப்பகுதியில் இரண்டு வேகத்தடைகள் வேண்டும், என்று போராடினார்கள். போராட்டம் சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக