கருங்குளம் - வெங்கடாஜலபதி கோவிலில் கருடசேவை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

கருங்குளம் - வெங்கடாஜலபதி கோவிலில் கருடசேவை.

கருங்குளம் - வெங்கடாஜலபதி கோவிலில் கருடசேவை.

செய்துங்கநல்லூர் செப் 21 கருங்குளம் வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை கருடசேவை நடந்தது. காலை 6 மணிக்கு விஸ்வரூபம். 10 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம். 10. 25 மணிக்கு உற்சவர் சீனிவாசன் தெற்கு கோவிலில் எழுந்தருளினார்.

11 மணி அளவில் மூலவர் வெங்கடாஜலபதி உடன் உற்சவர் சீனிவாசன் சிறப்பு திருமஞ்சனம், தொடர்ந்து அலங்காரம். தீபாராதனை. தீர்த்தம். சடாரி. பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

மாலை 6 மணிக்கு சாயரட்சை. 7.30 மணிக்கு உற்சவர் சீனிவாசன் கருட மண்டபத்தில் எழுந்தருளி கருட வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்டு 11 மணிக்கு கருட வாகனத்தில் காட்சி அளித்தார். மலை சுற்றி வந்து யதாஸ்தானம் வந்தடைந்தார். 

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் ராஜேஷ். நிர்வாக அதிகாரி பொறுப்பு சதீஷ். ஆய்வாளர் நிஷாந்தினி. கருங்குளம் ஜோஸ்யர்கள் வெங்கடேசன்.கண்ணன். ஓய்வுபெற்ற ஐ‌. ஏ.எஸ். அதிகாரி ராமசுப்பன். கள்ளப் பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி. கருங்குளம் சங்கர், சின்னகண்ணன். ராமசுப்பன் .ராமன்.கார்த்திகேயன். பாலாஜி. உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad