திருப்பூரில் மளிகை கடை ஹோட்டல்கள் காய்கறி கடைகள் உள்ளிட்ட மக்கள் பயன்பாட்டுக்குள்ள கடைகள் அனைத்திலும் பாலித்தீன் கவர் தாராளமாக புழக்கத்தில் உள்ளது அதேபோல் ஒயின்ஷாப்புகளில் பழையபடி பிளாஸ்டிக் டம்ளர்கள்
அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது பிளாஸ்டிக் கழிவால் பூமி தன்னுடைய சக்தியை இழந்து வருகிறது என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாகும் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கவர்கள் பிளாஸ்டிக் டம்ளர்கள்
அளவுக்கு அதிகமாக இருப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை மாசுக்கட்டுப்பாடு வாரியம் தடுக்க முடிவதில்லை இதையொட்டி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் இரண்டு மற்றும் மூன்றாம் காலாண்டு கலந்தாய்வு கூட்டத்தில் திருப்பூரில் அவிநாசி ரோட்டில் இயங்கி வரும் இலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் அதன் நிறுவன தலைவர் கலைவாணன் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் கிருஷ்ணன் அ.காஜாமைதீன் மூலனூர் பிரகாஷ் சுரேந்திரன் நகுலன் கார்த்திகேயன் ரிசிகுமார் தனலட்சுமி செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் நாரணவரே மணி சங்கர் ராவ் இ.ஆ.ப., அவர்களிடம் பாலிதீன் ஒழிப்பதற்கு முழு வீச்சாக நடவடிக்கை எடுக்க வேண்டும் பெருமாள் கோயில் அருகில் விற்கப்படும் பாலித்தீன் மொத்த விற்பனை கடைகளில் ரைடு செய்ய வேண்டும் அனுப்பர்பாளையம் கோவை டிபார்ட்மென்ட் அருகில் உள்ள பிளாஸ்டிக் மொத்த விற்பனை கடையிலும் ரெய்டு நடத்தி அபராதம் விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர் இது சம்பந்தப்பட்ட மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை உடனடியாக எடுப்பதாக உறுதியளித்தார் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் மக்கள் விழிப்புணர்வு இயக்கம் இரண்டு ரூபாய்க்கு துணி பைகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக