எதிர்கட்சி தலைவர் , முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் நகரில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தை மேற்கொண்டார்
வரும் 2026 சட்டமன்றதேர்தலில் அ இ அ தி மு க கூட்டணிக்கு வாக்களிக்க பொதுமக்களை சந்திக்கும் இந்த பொது கூட்டத்தில் கலந்து பேசினார்.
அ இ அ தி மு க ஆட்சியில் மக்களுக்கும் , விவசாயிகளுக்கும் , பெண்களுக்கும் கொண்டு வந்த திட்டங்கள் குறித்தும் அதை
திமுக முடக்கியதாகவும் இது குறித்து பேசியதோடு அஇஅதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முடக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவோம் எனவும் அதோடு அனைத்துதரப்பு மக்களுக்கும் புதிய சலுகை திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்துவோம் எனவும் பேசினார். நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்
எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வருகையை முன்னிட்டு
மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி . மகேந்திரன் அவர்களின் சீரிய ஏற்பட்டால்
கணியூர் தொடங்கி மடத்துக்குளம் , கிருஷ்ணாபுரம் , மைவாடி , பாலப்பம்பட்டி மற்றும் உடுமலைப்பேட்டை நகர எல்லைவரை
சுமார் 20 கிலோ மீட்டர் வரை சாலைகளின் இருபக்கங்களிலும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அ தி மு க கட்சி கொடிகள் , எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழநிச்சாமி அவர்களை வரவேற்கும் விதமாக பிரமாண்டமான பேனர்கள் அமைத்து அனைவரையும் அசரவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக