தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து, உரியவர்களிடம் ஒப்ப டைத்தல் தொடர்பாக! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 13 செப்டம்பர், 2025

தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து, உரியவர்களிடம் ஒப்ப டைத்தல் தொடர்பாக!

தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து, உரியவர்களிடம் ஒப்ப டைத்தல் தொடர்பாக!
வேலூர் , செப் 13 -

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஆ.மயில்வாகனன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், CEIR-PORTAL மற்றும் CELL TRACKER மூலமாக, வேலூர் மாவட்டத்தில் களவுபோன/தொலைந்துபோன செல்போன்கள் தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுவரை 9 கட்டங்களாக சுமார் ரூ.3,38,92,400/- (மூன்று கோடியே முப்பத்தெட்டு லட்சத்து தொன்னூற்றி இரண்டாயிரத்து நானூறு ரூபாய்) மதிப்புடைய, 1,754 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 13.09.2025-ம் தேதி 10-வது கட்டமாக,
CEIR PORTAL மூலம் புகார்கள் பெறப்பட்டு, அதில் சுமார் ரூ.45,40,000/-(நாற்பத்து ஐந்து இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய்) மதிப்புடைய 227 செல்போன்கள் கண்டு பிடிக்கப்பட்டும், CELL TRACKER மூலம் புகார்கள் பெறப்பட்டு சுமார் ரூ. 4,60,000/- (நான்கு இலட்சத்து அறுதாயிரம் ரூபாய்) மதிப்புடைய 23 செல்போன்கள் கண்டு பிடிக்கப்பட்டும், மொத்தமாக ரூ.50,00,000/- (ஐம்பது இலட்சம் ரூபாய்) மதிப்புடைய 250 செல்போன்கள்கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. இதனையடுத்து, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாயிலாக மீட்கப்பட்ட செல்போன்கள் அனைத்தையும் உரியவர்களிடம் ஒப்ப டைக்கப்படுகிறது.இதுவரை மொத்தமாக சுமார் ரூ.3,88,92,400/- (மூன்று கோடியே என்பத்தெட்டு லட்சத்து தொன்னூற்றி ரண்டாயிரத்து நாணூறு ரூபாய்) மதிப் புடைய 2,004 செல்போன்கள் கண்டு பிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது என்பதை வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad