தமிழ் நாடு முதலமைச்சர் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மாபெரும் மருத்துவ முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 13 செப்டம்பர், 2025

தமிழ் நாடு முதலமைச்சர் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மாபெரும் மருத்துவ முகாம் !

தமிழ் நாடு முதலமைச்சர் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மாபெரும் மருத்துவ முகாம் !
குடியாத்தம் , செப் 13 -

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தமிழ் நாடு முதலமைச்சர் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மாபெரும்  மருத்துவ முகாம்  குடியாத்தம் திருவள்ளுவர் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது இந்த முகாமில் குடியாத்தம் சுற்றியுள்ள சுமார் 2000 ஆயிரத்துக்கு மேற்பட்டபொதுமக்கள் கலந்துகொண்டனர் இந்த முகாமில் வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை கூடுதல் செயலாளர் மருத்துவர் ச. உமா, இ.ஆ.ப. மாவட்ட ஆட்சித்தலைவர்  வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப. குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் நலம் காக்கும் ஸ்டா லின் மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் குடியாத் தம் சட்டமன்ற உறுப்பினர்  அமுலு விஜ யன்  நகர மன்றத்தலைவர் சௌந்தரரா ஜன், ஒன்றியக்குழுத்தலைவர் சத்யா னந்தம், வருவாய் கோட்டாட்சியர்  சுபல ட்சுமி, நகர மன்ற உறுப்பினர்கள் நவீன் சங்கர், எம்.எஸ்.குகன், நகராட்சி ஆணை யாளர்  மங்கையர்கரசன், வட்டாட்சியர் பழனி மற்றும் மருத்துவர்கள் செவிலியர் கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பொது மக்களுக்கு இலவச அனைத்து விதமான மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு வழங்கி குடியாத்தம் நகராட்சி சார்பில் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகள் செய்துள்ளனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad