குடியாத்தம் அனுமதி இல்லாமல் வனப் பகுதியில் முரம்பு கொட்டி சமம் செய்த தற்கு ஒரு லட்சம் அபராதம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 13 செப்டம்பர், 2025

குடியாத்தம் அனுமதி இல்லாமல் வனப் பகுதியில் முரம்பு கொட்டி சமம் செய்த தற்கு ஒரு லட்சம் அபராதம்!

குடியாத்தம் அனுமதி இல்லாமல் வனப் பகுதியில் முரம்பு கொட்டி சமம் செய்த தற்கு ஒரு லட்சம் அபராதம்!
குடியாத்தம் , செப்13 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதியில் உடம்பு மண் கொட்டி சமம் செய்தவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம்  தூ கோ. அசோக் குமார் இ.வ.ப., மாவட்ட வன அலுவலர், வேலூர் வனக்கோட்டம்,  மணிவண்ணன் உதவி வனப்பாதுகாவலர் வேலூர் வனக் கோட்டம்,  உத்திரவின் படி 12.09.2025-ம் தேதி மாலை சுமார் 06.00 மணியளவில், N. பிரதீப்குமார் வனச்சரக அலுவலர், குடியாத்தம் வனச்சரகம், A.சுரேஷ் சைனகுண்டா பிரிவு வனவர், D. பூபதி சைனகுண்டா பீட், வனக்காப்பாளர், V.ஸ்ரீதரன் சைனகுண்டா பீட், வனக்காவ லர், P.பிரபு தனகொண்டபல்லி பீட், வனக்காப்பாளர், G. அசோக்குமார் தனகொண்டபல்லி பீட், வனக்காவலர், குழுவினருடன் சைனகுண்டா விரிவு காப்புக்காடு, சைனகுண்டா பீட் பகுதியில் களத்தணிக்கை மேற்கொண்டிருந்த போது O.M.உமாசங்கர் த/பெ கத்திகாஜ லம் குப்பனக்கனாப்பல்லி கிராமம், குடிபாலா மண்டல், சித்தூர் மாவட்டம், ஆந்திர பிரதேசம், என்பவர், கொதல மடுகு ஆந்திர கல்குவாரிக்கு செல்ல வர இருப்பதால், சைனகுண்டா விரிவு காப்புக்காட்டின் வழியாக செல்லும் சாலை பள்ளங்களில் அனுமதியின்றி அத்துமீறி மொரம்பு மண் கொட்டி சமன் செய்து கொண்டிருந்த பொழுது, விசார ணை மேற்கொண்டு வனக்குற்றம் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட வன அலுவலர் வேலூர் வனக்கோட்டம், வேலூர் அவர்களின் உத்திரவின் படி, 13.09.2025-ம் தேதியில் அபராத கட்டணம் ரூபாய்: 1 லட்சம் விதிக்கப்பட்டது

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad