உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் அன்றாடம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது.
இந்நிலையில் இப் பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யவும், நெருக்கடிகளை தீர்க்கவும் ஆலோசனை கூட்டம் நகர்மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
நகர்மன்ற தலைவர் மு.மத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை, போக்குவரத்து காவல்துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் அனைவரும் கலந்து கொணடனர்.
இதில் மேற்கண்ட பிரச்சனைகளை தீர்க்கவும் அதற்கான மேல் நடவடிக்கைகள் எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக