திருப்பூர் வடக்கு மாநகரம் பத்தாவது வார்டு அனுப்பர்பாளையம் காமாட்சி அம்மன் மண்டபத்தில்
10 வது வார்டு கவுன்சிலர் பிரேமலதா கோட்டாபாலு அவர்களின் தலைமையில் அனுப்பர்பாளையம் கேரம் நண்பர்கள் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு தென்னிந்திய அளவிலான மாபெரும் இரட்டையர் கேரம் போட்டி நடைபெற்றது இந்த நிகழ்விற்கு 2 வது வார்டு முன்னாள் நகர மன்ற உறுப்பினர் மற்றும் மாநகர திமுக அயலாக அணி அமைப்பாளருமாகிய கோட்டா பாலு EX.MC அவர்கள் தலைமை வகித்தார் 15 வேலம்பாளையம் பகுதி செயலாளர் கொ. ராமதாஸ் 1ஆம் மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம் பத்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர் எம் எஸ் மணி MC முன்னாள் வர்த்தக அணி அமைப்பாளர் மற்றும் ராதாகிருஷ்ணன் 22 வது வார்டு கவுன்சிலர் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மரியாதைக்குரிய மேயருமான ந. தினேஷ்குமார் மற்றும் திருப்பூர் வடக்கு மாநகர திமுக பொறுப்பாளர் ஈ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியினை துவக்கி வைத்து பரிசுகளை வழங்கினர்
பரிசு விபரம் முதல் பரிசு முதல் பரிசு ரூபாய் 20 ஆயிரம் இரண்டாம் பரிசு 12 ஆயிரம் மூன்றாம் பரிசு 5 ஆயிரம் நான்காம் பரிசு 5 ஆயிரம் இந்த பரிசுகள் அனைத்திற்கும் கோப்பைகள் வழங்கப்பட்டது கால் இறுதியில் ஆட்டம் இழப்பவருக்கு ரூ 1000 பரிசு வழங்கப்பட்டது ஒரு டீம் முதல் சதம் அடிப்பவருக்கு ரூ 1000 பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசு அம்மன் ஃபேஷன் தங்கராஜ் & கணேசன் இரண்டாம் பரிசு சுவி டெக்ஸ் அருண் & சின்னத்தம்பி மூன்றாம் பரிசு சசி & அஜி பாலக்காடு நான்காம் பரிசு அம்மன் ஃபேஷன் நசீர் & மருதாச்சல மூர்த்தி சிறப்பு பரிசு ஆர் பிரீத் கோவை
இந்த நிகழ்வினை கேரம் சென்டர் தலைவர் என் மனோகரன் கேரம் சென்டர் செயலாளர் எஸ் எஸ் பிரியாணி பாபு ஆகியோர் போட்டியினை ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறப்பாக நடத்தினர் தலைமை அம்பையராக டி தங்கராஜ் என் கண்ணன் ஆகியோர் பொறுப்பேற்றனர் 10 வது வட்ட கழக செயலாளர் சசிக்குமார் நன்றி உரையாற்றினார் இந்த நிகழ்வில் 15 வேலம்பாளையம் பகுதி திமுக துணை செயலாளர் மணிமாறன் 14 வது வார்டு திமுக துணை செயலாளர் கஜேந்திரன் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் பார்த்திபன் 11 ஆவது வட்ட கழக செயலாளர் அய்யம்பெருமாள் டெக் சிட்டி வடிவேல் முருகன் 10 வது வட்ட துணை செயலாளர் பாலகிருஷ்ணன்,பொருளாளர் ரமேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர் கேரம் நண்பர்கள் குழு என் மனோகரன் செல்வம் எஸ் எஸ் பிரியாணி பாபு பவுன் ரகுபதி ஐயா சாமி லோகு கோபி மோகன் அமான் கணேஷ் நவநீதன் புவனேஸ்வரன் வேல்மணி தங்கவேல் அருண் காண்டியப்பன் வடிவேல் கில்லி நித்தியானந்தன் ஜெய்சூர்யா டாக்டர் சார் அருண் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி நடைபெற பத்தாவது வார்டு கவுன்சிலர் பிரேமலதா கோட்டா பாலு அவர்களும் திமுக அயலக அணி மாநகர அமைப்பாளரும் முன்னாள் கவுன்சிலருமான கோட்டா பாலு அவர்களும் பெரிதும் உறுதுணையாக இருந்தனர் இவர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நன்றி கூறி பாராட்டினர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக