தமிழகம் எங்கும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணமாக அதிமுக பொது செயலாளரும் முன்னாள் முதல்வருமாகிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் அப்போது அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழில்துறையினரை நேரில் சந்தித்து தொழில்துறையில் உள்ள பல்வேறு இன்னல்களை அகற்றிட ஆலோசனைகளை பெற்றும் கொடுத்தும் வருகிறார் அந்த வகையில் திருப்பூரில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்திற்கு திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகை தரும் அதிமுக பொது செயலாளர் முன்னாள் முதல்வர்
மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திருப்பூரில் உள்ள அனைத்து விதமான தொழில்களை சார்ந்த தொழில்துறையினரை சந்திக்க உள்ளார் அது சம்பந்தமாக அனுப்பர்பாளையத்தில் உள்ள பாத்திர முதலாளிகள் சங்கத்தின் தலைவர்
G.C.M.R சிதம்பரம் மற்றும் செயலாளர்
M.V தர்மமூர்த்தி ஆகியோரிடம்
பொது செயலாளரை சந்திப்பதற்கான அழைப்பிதழை
15 வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர்
வெ.அ.கண்ணப்பன் அவர்களும் அண்ணா பாத்திர தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர்
க.குணசேகரன் ஆகியோர் சங்கத்தினரிடம் வழங்கி அவர்களை வரவேற்றார்கள்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக