ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள சக்தி ரோடு பகுதியில், சத்திய ரோடு அருகே கழிவுநீர் கால்வாயில் ஆண் ஒருவர் தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இது கொலை என தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், தலையில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்தள்ளது. இறந்த நபரின் தலையின் பின்பகுதியில் ரத்தம் அதிகளவில் வெளியேறியிருந்தது. சம்பவ இடத்துக்கு அருகே ரத்தக்கரையுடன் கூடிய கல் ஒன்றை போலீசார் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக