ஈரோட்டில் மனைவி மயங்கி விழுந்து இறந்த துக்கத்தில் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வி. வி.சி.ஆர் நகரைச் சேர்ந்த நாசர் அலி (57) என்பவரின் மனைவி ஜமீலா (51) வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். அவரைத் தொடர்ந்து, கணவர் நாசர் அலி, மனைவி இல்லாத உலகில் வாழ விருப்பமில்லை என உறவினருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் வந்து பார்த்தபோது இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர்
ம. சந்தானம்
ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக