திருப்பத்தூர் அருகே சொகுசு பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு! போலீசார் விசாரணை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 18 செப்டம்பர், 2025

திருப்பத்தூர் அருகே சொகுசு பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு! போலீசார் விசாரணை!

திருப்பத்தூர் அருகே சொகுசு பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு! போலீசார் விசாரணை!

திருப்பத்தூர் , செப் 18 -

திருப்பத்தூர் மாவட்டம் தனியார் சொகுசு பேருந்து ஷேர் ஆட்டோ நேருக்கு நேராக மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்தில் பலி!. போலீசார் விசாரணை.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் ரவி (வயது 38) என்பவர் தினசரி மார்க்கெட்டிற்கு காய் கறிகளை ஆட்டோவில் ஏற்றி வந்துள்ளார்
அப்போது தூய நெஞ்சக் கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்க ளை சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அழைத்து செல்வ தற்காக அந்த சொகுசு பேருந்து வந்துள் ளது. மேலும் சொகுசு பேருந்து ராங் ரூட் டில் சென்றதால் பேருந்து இடித்ததில்  ஆட்டோ ஓட்டுநர் ரவி சம்பவ இடத்திலே யே உயிரிழந்தார்.மேலும் அப்பளம் போல் நொறுங்கிய ஆட்டோவில் சிக்கிக் கொ ண்ட  ரவியின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டு உடற்கூறு ஆய்வுக் காக   திருப்பத்தூர் அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சொகுசு பேருந்தின் ஓட்டுநர் கிருஷ்ணகிரி குமனூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் ரஞ்சித் குமார்(வயது 25) என்பவ ரை திருப்பத்தூர் நகர போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதிர் திசையில் வந்த பேருந்து இடித்ததில் ஆட்டோ ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  ஆழ்ந்த சோகத்தை ஏற் படுத்தியது.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad