சட்ட விரோதமாக விற்பனை செய்வதற் காக வைத்திருந்த சுமார் 50 கிலோ புகை யிலை பொருட்கள் பறிமுதல் !
வேலூர் , செப் 18 -
வேலூர் மாவட்டம் காவல் கண்காணிப் பாளர் A. மயில்வாகனன். இ. கா. ப., அவர்களின் உத்தரவின் பேரில்,வேலூர் மாவட்டத்தை போதையில்லா மாவட்ட மாக உருவாக்க மாவட்டகாவல்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர நடவடிக்கையில், இன்று (17.09.2025) வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை தொடர்பாக மாவட்டம் முழுவதும் சுமார் 138 கடைகளில் 135 கடைகளை சோதனை செய்ததில் அவர் களிடமிருந்து சட்டவிரோதமாக விற்ப னை செய்வதற்காக வைத்திருந்த சுமார் 50 கிலோ புகையிலை பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டு, எதிரிகள் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதி மன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட் டது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடு வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள் ளார் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக