தாராபுரத்தில் அண்ணா பிறந்த நாள் விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 15 செப்டம்பர், 2025

தாராபுரத்தில் அண்ணா பிறந்த நாள் விழா


தாராபுரம் நகரில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா நகர திமுக சார்பில் நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.


வடதாரை பகுதியிலிருந்து ஊர்வலமாக வந்து அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற விழா நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், நகர மன்ற தலைவர் பாப்புகண்ணன், தாராபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.கே. துரைசாமி, நகர அவைத் தலைவர் கதிரவன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.



விழா நிறைவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் பல நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad