ஆம்பூர் அருகே தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கி கட்டிட தொழிலாளி சம்பவ இடத்தில் உயிரிழப்பு!
வாணியம்பாடி,செப்14-
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கூர்மாபாளையம், ரங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் (36),கட்டிடத் தொழி லாளியான இவர் இன்று ஆம்பூர் பை பாஸ் சாலையில் உள்ள தனியார் திரு மண மண்டபத்தில் நடைபெறும் உறவி னரின் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி யில் கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது எல்.மாங்குப்பம் பகுதியில் பேரணாம்பட்டில் இருந்து ஆம்பூர் நோக்கி முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சுரேந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரை ந்து சென்ற உமராபாத் போலீசார் பிரேதத் தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனு ப்பி வைக்கப்பட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக