பள்ளி காலாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களிடையே அறிவியல் போற்றுதும் கலந்துரையாடல் நிகழ்சி!
வேலூர் , செப் 23 -
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே நடைபெற்று வரும் வானவில் மன்றத்தின் வடக்கு மண்டல அளவிலான அறிவியல் போற்றுதும் கலந்துரையாடல் நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கலந்துரையாடல் நிகழ்வினை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சு.தயாளன் தொடக்கி வைத்து பேசினார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் கே.எம்.ஜோதீஸ்வ ரன் பிள்ளை வாழ்த்தி பேசினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனா ர்த்தனன் வரவேற்று பேசினார்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வேலூர் சா.குமரன் இராணிப்பேட்டை நரசிம்மன், திருப்பத்தூர் - நிக்சன், குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் எல்.சீனிவாசன் மாநில கருத்தாளர் பி. ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். வானவில் மன்ற மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் என்.மாதவன், அறிவியல் வெளியிட்டின் மாநில ஒருங்கிணைப் பாளர் எஸ்.சுப்பிரமணி, மண்டல ஒருங்கி ணைப்பாளர் வி.அம்பிகா ஆகியோர் கலந்துரையாடல் நிகழ்வினை நடத்தினர்
வானவில் மன்ற கருத்தாளர்களின் அனு பவ பகிர்வு, காலாண்டு விடுமுறையில் சிறப்பு நிகழ்வாக அறிவியல் போற்றுதும் நிகழ்வினை வானவில் மன்ற கருத்தாளர் கள் தங்களின் பகுதிகளில் 5 நாட்கள் 5 இடங்களில் செயல்பாடுகள்மேற்கொள்ள திட்டமிடல், வானவில் மன்றத்தின் செயல் பாடுகள், மன்ற போட்டிகள், 34வது குழந் தைகள் அறிவியல் மாநாடு, ஆசிரியர் அறிவியல் மாநாடு, வானவில் மன்ற மாதிரி வகுப்பறை போன்ற தலைப்பு களில் கலந்துரையாடல் நடைபெற்றது.
மாநில கருத்தாளர் என்.கோடீஸ்வரி நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக