ஸ்ரீவைகுண்டம் செப். 2. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில் 4 திருப்பதி யான இரட்டை திருப்பதி அரவிந்தலோச்சன பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பௌத்ரோத்ஸவம் நடைபெறுவது உண்டு.
கோவில்களில் தினசரி நடைபெறும் பூஜை முறைகளில் ஏதாவது விடுதல்கள் இருப்பின் அதற்கு பரிகாரமாக
பௌத்ரோத்ஸவம் நடத்துவது வழக்கம்.
கடந்த இரண்டு நாட்கள் பௌத்ரோத்ஸவம் நடந்தது. இரண்டாம் நாளான இன்று காலை 7.30 மணிக்கு விஸ்வரூபம். 8.30 மணிக்கு திருமஞ்சனம். 9.30 மணிக்கு சிறப்பு ஹோமம். 11 மணிக்கு பூர்ணாகுதி. நாலாயிர திவ்யப்பிரபந்தம் நடந்தது. பகல் 1 மணிக்கு சாத்துமுறை. தீர்த்தம். சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 4.40 மணிக்கு சாயரட்சை. பவுத்திர மாலைகளுடன் உற்சவர் செந்தாமரை கண்ணன் கருட வாகனத்தில் உள் புறப்பாடு நடந்தது. பின்னர் தீர்த்தம். சடாரி.பிரசாதம் வழங்கப்பட்டது..
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் பாலாஜி. ரகு ஸ்தலத்தார்கள் ஸ்ரீதரன். சந்தானம். ஆத்தான் கீழத்திருமாளிகை ராமானுஜம் ஸ்வாமிகள். பட்சிராஜன். மதுரகவி. சீனவாசன். ராஜூ. அறங்காவலர் குழுத் தலைவர் கணேசன் என்ற ராமானுஜம். உறுப்பினர்கள் கிரிதரன்.ராமலட்சுமி. காளிமுத்து. செந்தில்.
நிர்வாக அதிகாரி சதீஷ். ஆய்வாளர் நம்பி. கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாச அறக்கட்டளை கள இயக்குனர் பாபு. களப்பணியாளர் பொறியாளர் கார்த்தி. பாலாஜி. உட்பட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் - தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக