வருகின்ற 2026சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் ஆதரவை தெரிவித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் இப்ராஹிம் பாதுஷா அவர்கள் நிர்வாகிகளுடன் திருப்பூர் ஃபார்ச்சூனர் ஹோட்டலில், நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை கொடுத்தனர்.
இந்நிகழ்வில் பொது செயலாளர் விஷ்ணு லட்சுமணன், ஒருங்கிணைப்பாளர் ரஹீம், முதன்மைச் செயலாளர் பிரகாஷ், தலைமை நிலைய செயலாளர் முகமது ஃபாரூக், கழக கொள்கை பரப்புச் செயலாளர் சபிதா ராணி, செய்தி தொடர்பாளர் அபுதாஹிர், கழக அமைப்பாளர் மோகன்ராஜ், திருப்பூர் மாவட்ட தலைவர் செல்வகுமார், திருப்பூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் கோபாலகிருஷ்ணன், திருப்பூர் மாவட்ட துணை அமைப்பு செயலாளர் சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக