அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் வாராந்திர ஆலோசனை கூட்டம் தலைவர் விவசாய மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 17 செப்டம்பர், 2025

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் வாராந்திர ஆலோசனை கூட்டம் தலைவர் விவசாய மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது


திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பிரிட்ஜ்வே காலனியில் உள்ள அனைத்து இந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் வாராந்திர ஆலோசனை கூட்டம் சங்க நிறுவனத் தலைவர் ஜி.கே. விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்  

சங்கம் சார்ந்த நடவடிக்கைகளில் மற்றும் முடிவுகளில் தலைவரின் ஆலோசனை படியும் சொல்படியும் நடப்பேன்.

சங்கத்தின் அனைத்து கொள்கைகளையும் மற்றும் கோட்பாட்டுகளையும்

கடைப்பிடிப்பேன்.

சங்கம் சார்ந்த பணிகளை சொந்த விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு சிறந்த முறையில் குறித்த நேரத்தில் செய்து முடிப்பேன்.

 நமது சங்க விழாக்கள் மற்றும் நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொண்டு எனக்கான பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன். நமது சங்கத்தின் அடையாளமான பச்சை துண்டு சங்க கொடி மற்றும் சின்னங்கள் ஆகியவற்றின் மாண்பை காப்பேன்.

தலைமை அலுவலகத்தின் வாயிலாக வரும் அறிவிப்புகள் மற்றும் செய்திகளை மற்றவர்களுக்கு பரப்புரை செய்வேன்

சங்கத்தின்  வளர்ச்சிக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன் இவ்வாறு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் சங்க நிறுவனத் தலைவர் ஜி.கே. விவசாய மணி என்கின்ற ஜி.சுப்பிரமணியம் அவர்கள் சங்க நிர்வாகிகளிடம் உறுப்பினர்களிடம் பல்வேறு கருத்துக்களை பரிமாற்றம் செய்தார் ஆலோசனைகளை தெரிவித்தார்.இந்த கூட்டத்தில் மாநில மாவட்ட மாநகர நகர வார்டு ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் கூட்ட முடிவில் அனைவருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad