ஜனவரி 26, மார்ச் 22 , மே 1 , ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 மற்றும் நவம்பர் 1 ஆகிய இந்த தேதிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். இந்த முறை அக்டோபர் 2 அன்று பண்டிகை காரணமாக அன்றைய தினம் நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
அதற்கு பதிலாக அக்டோபர் 11 (நாளைய தினம்) இக்கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அக்டோபர் 11ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில், காணொளிக் காட்சி (VC) வாயிலாகக் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
இந்த மாதம் 11-ஆம் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தின்போது, அமைக்கப்பட்டுள்ள OFC உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பிரதிநிதிகளுடன் நேரடி காணொலி உரையாடல் நடத்தவுள்ளார்கள்.
இது மாநிலம் முழுவதும் உள்ள 10.000 கிராம பஞ்சாயத்துகளுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது. நாளைய தினம் தமிழ்நாட்டில் 11.800-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள் கண்ணாடி இழை கம்பி வடம் (OFC) வழியாக இணைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் கண்ணாடி இழை கம்பி வடம் (OFC) வழியாக இணைக்கப்பட்டுள்ள 174 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் நாளைய தினம் (11.10.2025) நடைபெறவுள்ள கிராம சபைக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அவர்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், கொடுக்காம்பாறை ஊராட்சியிலும், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், அயன்பொம்மையாபுரம் ஊராட்சியிலும் கலந்து கொள்ள உள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக