அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்
2023 -2024 ஆண்டில் சுமார் 14 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம்!
திறப்புவிழா காணாத புதியஅங்கன்வாடி மையம் !
குடியாத்தம் , அக் 17 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் மேல்முட்டுகூர் ஊராட்சி கல்மடுகுகிராமம் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத் தின் கீழ் 2023 2024 ஆண்டில் சுமார் 14 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் கட்டப்பட் டது மேலும் அப்பகுதி பொதுமக்கள் வருடங்கள் ஆகியும் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பதற்கு தயாராக உள்ள நிலையிலும் திறப்பு விழா காணாததால் பூட்டியே கிடக்கிறது இதனால் குழந்தைகள் தினமும் அவதிப் படுகின்றனர் எனவே மாவட்ட நிர்வாகம் மேல்முட்டுகூர் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் மற்றும் சமையல் கூடம் கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக