தூத்துக்குடி மறவன் மடம் அருகே புதுக்கோட்டை G.H தெருவை சேர்ந்த வெங்கடாசலம் மகன் காசி வயது( 42 )இவர் கொத்தனார் தொழில் செய்து வருகிறார்.
இவர் புதுக்கோட்டையில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் போது மறவன்மடம் அருகே அதே திசையில் பின்னால் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒதுக்கிவிட்டு சென்றதால் நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது.
இதில் தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் .திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தமிழக குரல் செய்திக்காக தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்.மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக