ரூ.53 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை ஒன்றிய பெருந் தலைவர் பூமி பூஜை தொடக்கம்!
ராணிப்பேட்டை , அக் 16 -
ராணிப்பேட்டை மாவட்டம் இரயில்வே நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட, பழுதடைந்த சாலையை ரூ.53 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை ஒன்றிய பெருந்தலைவர் தொடங்கி வைத்தார் இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட சித்தேரி ஊராட்சியில், கீழ் கண்டிகை மற்றும் அண்ணா நகர் கிராமத்திற்கு செல்லும் சாலை, கடந்த 2002ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. சாலை அமைக்கப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்த சாலை நீண்ட காலமாக, குண்டும் குழியுமாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்த சாலை அமைந்துள்ள இடம் இரயில்வே நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இரயில்வே நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் சாலை அமைக்க முடியாத நிலையில் இருந்தது.
இந்நிலையில், இந்த சாலை அமைப்ப தற்கு இரயில்வே நிர்வாகத்திற்கு உரிய கட்டணமாக ரூ.5 இலட்சம் செலுத்தி, மேற்படி நிர்வாகத்தின் அனுமதி பெறப் பட்டது. எனவே, சித்தேரி கீழ் கண்டிகை மற்றும் அண்ணா நகர் சாலையை சீர மைத்து, தார் சாலை அமைத்து தருமாறு ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் கிராம பொதுமக்க ளும் நெமிலி ஒன்றிய சேர்மன் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், நெமிலி சேர்மன் வடி வேலு அவர்கள், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களிடம் தகவல் தெரிவித் ததும், அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு, இந்த சாலையை உடனடியாக தார் சாலை அமைத்து தருமாறு கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து 1.5 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்து, ரூ.53 இலட்சத்திற்கு மதிப்பீடு பட்டியல் தயாரித்து, பின்னர் ஒன்றிய கவுன்சிலில் தீர்மானம் நிறை வேற்றி, ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 53 லட்சம் நிதியை ஒன்றிய பெருந்தலைவர் அவர்கள் ஒதுக்கீடு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று சித்தேரி கீழ்கண்டிகை மற்றும் அண்ணா நகர் சாலையில் தார் சாலை அமைக்கும் பணியினை நெமிலி ஒன்றிய பெருந் தலைவர் வடிவேலு அவர்கள் தொடங்கி வைத்தார். 25 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த சாலை, தற்போது புதிதாக அமைக்கப்படுவதை அறிந்த பொதுமக்கள், மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், அமைச்சர் காந்தி அவர்களுக்கும், சேர்மன் வடிவேலு அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கலைஞ்செழி யன், ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பிர மணி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தனசேகர் அவைத்தலைவர் புருஷோத்த மன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சின்னப்பா, சித்தேரி வார்டு உறுப்பினர் கள் ஆஷா பாஸ்கர், ஷீலா ரமேஷ், சிவகாமி ஜெகதீசன், விஜி, அருள், ரஞ்சித் குமார் மற்றும் குப்புசாமி, ஜெயபால், கபாலி, ஜெகதீசன், டில்லி, அண்ணாமலை, மணி, குருநாதன், வெங்கடேசன், ராஜா, பரத்ராஜ், தணிகாசலம், ஜெகதா, கோமதி, மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக