தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அரங்கம்
ஆற்காடு நகராட்சியில் அவசர ஆலோ சனை கூட்டம்!
ராணிப்பேட்டை , அக் 16 -
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சியில் நகர மன்ற அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் தேவி பென்ஸ் பாண்டி யன் மற்றும் துணை தலைவர் பவளக் கொடி சரவணன் ஆகியோர் தலைமை யில் நகராட்சி ஆணையாளர் சுரேஷ் குமார் முன்னிலையில் கூட்டம் நடை பெற்றது மாதாந்திர அவசர ஆலோசனை யாக நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் நகராட் சியின் அனைத்து வார்டுகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கலந்துகொண்டனர் தற்போது பெய்து வரும் கனமழையால் தங்கள் பகுதிகளில் நிலவும் அடிப்படை
வசதிக் குறைபாடுகள் மற்றும் பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வார்டு உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர் குடிநீர்,சாலை வசதிகள் தெருவிளக்குகள் சுகாதாரம் மற்றும் கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன
இக்கூட்டத்தில் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப் பட்டது மேலும் நகர மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நகர மன்ற தலைவர் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக