தீபாவளி பண்டிகையையொட்டி ராணிப் பேட்டை மாவட்டத்தில் 626 காவல் அதி காரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணி!
ராணிப்பேட்டை , அக் 19 -
ராணிப்பேட்டை மாவட்டம் 20.10.2025-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அய்மன்ஜமால் மாவட்டம் முழுவதும் குற்றச் சம்பவம் தடுக்கும் பொருட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மக்கள் அதிகம் கூடும் இடங்களான 1.SKC சந்திப்பு 2. வாலாஜா
பேருந்து நிலையம் மற்றும் 3.அரக்கோ ணம் பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண் காணிக் கப்படு
கின்றன. மேலும் குற்றச் சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக 5-நெடுஞ்சாலை ரோந்து வாகனங் கள் (High Way Patrol), 10-நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் (Four Wheeler Patrol), 55- இரண்டு சக்கர ரோந்து வாகனங்கள் (Two Wheeler Patrol), 18 இடங்களில்வாகன
தணிக்கைகளும் (Vehicle Check Points), 67- இடங்களில் Picket-களும் மற்றும் போக்கு வரத்துகளை சீர் செய்ய போக்குவரத்து காவல் குழுவும், குற்ற நடவடிக்கைகளை தடுக்க சாதாரண உடையில் காவல் குற்றப்பிரிவு 7 தனிப்படை மூலம் கண் காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குற்றச் செயல்கள் நடவாமல் கண்காணிப்பதோடு பொது மக்களிடம் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களிட மிருந்து தங்கள் உடமைகளை பாதுகாத் துக் கொள்ளுதல் போன்றவை குறித்து அவ்வப்போது ஒலிபெருக்கியின் மூலம்
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற் படுத்தி வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .மேலும் இப்பாதுகா ப்பு பணியில் 1 கூடுதல் காவல் கண் காணிப்பாளர், 2 துணை காவல்
கண்காணிப்பாளர்கள், 12 காவல் ஆய்வாளர்கள், 143 உதவி ஆய்வாளர்கள்/சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 626 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக