லாரியின் கீழே படுத்து உறங்கிய டிரைவர் உயிரிழந்தார். தூத்துக்குடியில் பரிதாபம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

லாரியின் கீழே படுத்து உறங்கிய டிரைவர் உயிரிழந்தார். தூத்துக்குடியில் பரிதாபம்.

லாரியின் கீழே படுத்து உறங்கிய டிரைவர் உயிரிழந்தார். தூத்துக்குடி பரிதாபம். 

தூத்துக்குடி தெற்கு சிலுக்கன்பட்டி கீழத் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சுந்தர்ராஜ் (55), லாரி டிரைவரான இவர் நேற்று தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ரயில்வே குடோனில் இருந்து உர மூடைகளை ஏற்றிக் கொண்டு சரக்கு ரயிலில் ஏற்றுவதற்காக கூட்ஸ் டிரெயின் யார்டில் நிறுத்தியுள்ளனார். 

பின்னர் லாரியின் அருகே தரையில் படுத்து உறங்கியுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு லாரி அவர் மீது ஏறியது.

 இதில் உடல் நசுங்கி பரிதாபமாக சுந்தர்ராஜ் இறந்தார். இதுகுறித்து தெர்மல் நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய லாரியை ஒட்டி வந்த டிரைவரான தூத்துக்குடி முருகேசன் நகரைச் சேர்ந்த நாகராஜன் மகன் சுரேஷ்குமார் என்பவரை தேடி வருகின்றனர்.

தமிழக குரல் செய்திக்காக தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ். மா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad