ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பில்
நரேந்திர மோடிஜி பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் ரத்ததான விழா!!!
ராணிப்பேட்டை , அக் 3 -
ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட வாலாஜா தலைமை அரசு மருத்துவமனையில்
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் சேவை நிகழ்ச்சியான இன்று வாலாஜா அரசு மருத்துவமனையில் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் P.ஆனந்தன் அவர்கள் தலைமையில், மாவட்ட பொது செயலாளர் சிவமணி அவர்கள் முன்னிலையில் இளைஞர் அணி மாவட்ட தலைவர் ஜீவானந்தம் அவர்களின் ஏற்பாட்டில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் கொடுத்தனர். இதில் மாநில பொதுச் செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளர் கார்த்திகாயினிஜி, அவர்கள் ரத்ததான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் மேலும் பாரதிய ஜனதா கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட அரசு தொடர்பு பிரிவின் மாவட்ட அமைப்பாளர் டாக்டர் விகே.சஞ்சய்லோகேஷ், மத்திய அரசின் நலத்திட்ட பிரிவின் மாவட்ட அமைப் பாளர் ரவீந்திரநாத் சிங் உடன் அரசு மருத்துவமனை டீன் உஷாநந்தினி,
அரசு மருத்துவமனை டாக்டர்கள்,
ரத்த வங்கி ஊழியர்கள், ரத்ததான கொடை வள்ளல் குமரன் ரவிசங்கர், நகர ஒன்றிய மாவட்ட பாஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் மேலும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் அட்டெண்டர்கள் பொதுமக்கள் என 500 பேருக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித் தனர் என்பது குறிப்பிடத்தக்கது
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக