தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. இதனால், இன்று (அக்டோபர் 16) பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே, கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகக் குரல் செய்திகளுக்காக தூத்துக்குடிசெய்தியாளர் கணேஷ்.மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக