வெள்ளாளன்விளை பிஷப் அசரியா நினைவு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 அக்டோபர், 2025

வெள்ளாளன்விளை பிஷப் அசரியா நினைவு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கல்.

வெள்ளாளன்விளை பிஷப் அசரியா நினைவு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கல். 

தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன்விளை பிஷப் அசரியா நினைவு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா இன்று நடைபெற்றது. 

வெள்ளாளன்விளை சேகர தலைவர் தாமஸ் ரவிக்குமார் ஜெபம் செய்து விழாவை தொடங்கி வைத்தார். போட்டிகளை டாக்டர் தம்பிராஜ் தொடங்கி வைத்தார். நைனார்புரம் தொழிலதிபர் பெப்சி பாலமுருகன்,சென்னை தொழிலதிபர் சொங்கோடி தன்ராஜ் தலைமை வகித்தனர். 

சிறப்பு அழைப்பாளராக பழைய மாணவர் சங்க தலைவர் ரவிக்குமார், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜரத்தினம், உடன்குடி ஒன்றிய குழு முன்னாள் சேர்மன் பாலசிங், இளங்கோ ,விடுதலை செழியன், சித்திரை பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அருள் திரு தாமஸ் ரவிக்குமார், ரூபன் இமானுவேல் ஆரம்ப பாடல் பாடினர். தொடர்ந்து சிவப்பு மஞ்சள் ,பச்சை ,நீலம் , குழு மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. தடகள வீராங்கனை ஜெஸிமா ,அனுசுயா பாத்திமா ஆகியோர் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தனர். விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உலாவிற்கான ஏற்பாடுகளை தாளாளர் ராஜேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்ட்ரூ மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad