திருவிளக்கை ஏற்றி வைத்து திருமகளே வருக.. தேவியாரின் ஒன்பது இரவுகள்.. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 அக்டோபர், 2025

திருவிளக்கை ஏற்றி வைத்து திருமகளே வருக.. தேவியாரின் ஒன்பது இரவுகள்..


தாராபுரத்தில் நவராத்திரி முன்னிட்டு அருமையான பொம்மைகளை வைத்து கொலு நிகழ்ச்சி நடைபெற்றது..



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஜவுளிக்கடை தெருவில் குடியிருக்கும் ரவி-லலிதா தம்பதியினர்  இல்லத்தில் கடந்த 30 ஆண்டுகளாக நவராத்திரி கொலு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இது குறித்து (லலிதாவின் மகள் )

திருமதி.விஷ்ணு பிரியா கூறுகையில்:-


நவராத்திரி.. ஒன்பது இரவுகளின் திருவிழா. இந்தியாவின் மிகப் பெரிய பாரம்பரிய பண்டிகை எது என்றால் அது நவராத்திரிதான். மொத்த இந்தியாவும் பக்தி மயமாக காணப்படும் இந்த ஒன்பது நாட்களும்.


சக்தி தேவியை இந்த 9 நாட்கள் வணங்குகிறோம். 10 வது நாள் தசரா அல்லது விஜயதசமி என்று அழைப்பர். முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்காகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்காகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்காகவும் நாம் கொண்டாடுகிறோம்..



தேவியரின் கொலு இந்த 9 நாள் விழாவின் முக்கிய அம்சமாகும். கொலுவை பொம்மைகளை காட்சி படுத்துவது என்று சுருக்கமாக சொல்லலாம். இந்த நவராத்திரி விழாவை 10 நாட்கள் தென் இந்தியாவிலும், வட இந்தியாவிலும் சிறப்பாக கொண்டாடுவர். கொல்கத்தாவில் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.


குறிப்பாக இந்த கொழுவில் ராமர், சீதை, ராமர் பட்டாபிஷேகம், ராமர் சீதை திருமண வைபோகம்,ஆனந்த சயனம் கோலம், சீதையுடன் ஆஞ்சநேயர் காட்டிற்கு சென்றது, மகாபாரதப் போர் காட்சிகள் போன்ற பொம்மைகள் வைத்து உள்ளது என குறிப்பிடத்தக்கது,



மாலை வேளையில் அருகில் இருக்கும் சுமங்கலிகளை, சிறுமிகளை அழைத்து தங்களால் இயன்றதை அளித்து மகிழ்வர். முக்கியமாக குங்குமம், மஞ்சள், மஞ்சள் சரடு, வெற்றிலை, பாக்கு அளிப்பார்கள்.


இறுதி நாளான மாலை அருகில் இருந்த பெண் குழந்தைகளை வரவழைத்து அவர்களுக்கு இந்து முறைப்படி நலுங்கு வைத்து அவர்களுக்கு கண்ணாடி வளையல் கையில் அணிவித்து அவர்களை எங்கள் வீட்டு பெண் குழந்தைகளாக அலங்கரித்து மகிழ்ச்சி அடைந்தோம் ,அவர்களுக்கு இனிப்பு வழங்கி பரிசுப் பொருட்கள் வழங்கி அவர்களை கௌரவமாக அனுப்பி வைத்தோம் மேலும் இதனால் அவர்கள் முறைப்படி வயதுக்கு வருவார்கள் குடும்பத்துடன் நலமாக சந்தோஷமாக படிப்பறிவு நலமாக வாழ்வார்கள் பின்னர் திருமண வைபவங்கள் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறும் மேலும் நாங்களும் உலக மக்களும் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்போம் மழை பொழியும்,  விவசாயம் செழிக்கும்,நாங்கள் பாரம்பரியமாக ஆண்டுதோறும் நவராத்திரி கொலு வைத்து வழிபடுவோம் என்று கூறினார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad