திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா போத்தம்பாளையத்தில் இயங்கி வரும் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு இல்லம் கடந்த 25 ஆண்டு காலமாக தொடர்ந்து பல்வேறு சேவைப் பணிகளை வருகின்றது
இதுபற்றி நியூ தெய்வ சிட்டி அறக்கட்டளை நிறுவனர் நான் தெய்வராஜ் அவர்கள் கூறியதாவது 25/09/2025 வியாழன் அன்று திருப்பூர் புஷ்பா தியேட்டர் பத்ரகாளி அம்மன் கோவிலில் வயதான தாத்தா பாட்டி ஆதரவின்றி பரிதவித்த தம்பதியருக்கு அடைக்கலம் வேண்டி திருப்பூர் மகிழ் வித்து மகிழ் அறக்கட்டளை மூலம் எங்களது நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு ஆதரவு தர கேட்டிருந்தார்.
இந்த இரு முதியவர்கள் நலன் கருதி திருப்பூர் வடக்கு காவல் நிலைய சரகத்திற்கு தெரியப் படுத்தி காவல்துறை அனுமதி பெற்று அழைத்து வரவேண்டி கூறியிருந்தோம். அங்குள்ள பத்ரகாளி அம்மன் கோவில் வாசலில் கூட்டி பெருக்கி கொண்டு கடந்த 30 ஆண்டு காலமாக ஆதரவற்று வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
இவர்களது வயது மூப்பு காரணமாக கோவிலில் இருந்து வெளியேற்றியதால் இவர்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நாளடைவில் இருவரும் கணவன் மனைவி இணைபிரியாமல் வாழ்ந்து வந்தனர். இவர் பெயர் விருதகிரி வயது 105, மனைவி பெயர் வசந்தா வயது 97 ஆகிய இருவருக்கும் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு முடித்திருத்தம் முகச்சவரம் செய்து குளிக்க வைத்து தூய்மைப் படுத்தி புத்தாடைகள் அணிய வைத்து உணவு மற்றும் அடைக்கலம் தந்து பராமரித்து வருகின்றோம் என்கிறார் தெய்வராஜ்..
ஆதரவற்ற தம்பதியர்கள் கடந்து வந்த விபரங்களை கேட்டறிந்தோம்.
இந்த முதியவர் பெயர் விருதகிரி இவர் 09/01/1919 ல் பிறந்தவர் வயது 105 இவர் 1952 ல் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றவர் என்றும் பெருமையுடன் கூறுகின்றார். மனைவி சென்னையை சார்ந்தவர் நாங்கள் இருவரும் அய்யர் சமூக்த்தை சேர்ந்தவர்கள் எங்களுக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே அவரும் திருமணம் ஆகி திருப்பூரில் சில வருடங்கள் வசித்து வந்த நிலையில் தற்போது சிறிவல்லிப்புத்தூர் குடிபெயர்ந்து விட்டார்களாம். எங்களை கவனிக்க மனமில்லை என்பதால் நாங்கள் இருவரும் வனவாசம் செல்ல முடிவு செய்து திருப்பூர் வந்து 70 ஆண்டுகள் ஆகின்றது. திருப்பூர் புஷ்பா தியேட்டர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவில் வாசலில் தஞ்சமடைந்து இருந்தோம்.
கடந்த 3 வருட காலம் எனது மனைவி வசந்தா இவளுக்கு கண்பார்வை குறைபாடு ஏற்ப்பட்டது ஒரு கண் ஆப்ரேஷன் செய்து இருந்த நிலையில் தற்போது இரு கண்களும் பார்வை தெரியாத நிலையில் தனது மனைவியை கூடவே கூட்டிட்டு வயதான காலத்தில் தன்னையும் தன் மனைவியையும் கூடவே வைத்து காப்பாற்றி வந்தார் விருதகிரி அய்யர். இந்த சூழ்நிலையில் வயது முதிர்வு மனைவி பார்வை இழந்த எங்களுக்கு ஆதரவற்றோரின் மறுவாழ்வு இல்லத்தில் அடைக்கலம் தந்து உதவிடுமாறு காவல்துறை வாயிலாக கண்ணீர் மல்க கூறினார்கள். இந்த வயதான தம்பதியர்களின் நலன் கருதி எங்களது நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு ஆதரவும் பராமரிப்பும் வழங்கி வருகின்றோம் என்று கூறினார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக