வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு பங்கேற்பு !
ராணிப்பேட்டை , அக் 15 -
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நெமிலி ஒன்றியக் குழு தலைவர் வடிவேலு தலைமை தாங்கி னார். கூட்டத்தில், 2026-ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் திமுகவிற்கு அதிகப் படியான வாக்குகள் பெற்றுத்தரக் கிளைக்கழக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் வரை அனைத்து நிர்வாகி களும் அயராது பாடுபட வேண்டும். சமூக வலைத்தளங்கள் வாயிலாக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க திறம்படச் செயல்பட வேண்டும். வரும் சட்டப் பேரவை தேர்தலில் திமுக விற்கு அதிகப்படியான வாக்குகளைப்
பெற்றுத்தர வேண்டும் உட்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதில், மாவட்ட மகளிர் அணி அமைப் பாளர் பவானிவடிவேலு , மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப் பாளர் பிரகாஷ் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் .
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக