திருப்பத்தூர்ரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 அக்டோபர், 2025

திருப்பத்தூர்ரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் !


திருப்பத்தூர்ரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் !
திருப்பத்தூர் , அக் 14 -

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவசௌந் திரவல்லி துவக்கி வைத்தார்திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில்  மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.  இதில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடிய சைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி யில் மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகை களை கையில் ஏந்தி விழிப்புணர்வு வாசகங்களை முழங்கியவாறு 50க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர். மேலும் எல்இடி திரையில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சித்திரங்கள் திரையிடப்பட்ட வாறு பெரிய வாகனம் பேரணியில் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி தூய நெஞ்சக் கல்லூரி வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நித்தியானந்தன் நிர்வாகப் பொறியாளர். தேசிங்கு ராஜா உதவி நிர்வாகப் பொறியாளர். மணிமேகலை. பாரதி. மற்றும் பிரியதர்ஷினி நிறைவடைந்தது.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad